ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியானது நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியால் ஆர்சிபி யின் கோப்பை கனவானது தகர்ந்து போனது. இதனால் அகமதாபாத் மைதானத்தில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மிகவும் சோகமாகவே காணப்பட்டார். இதுவரை நடந்த போட்டிகளில் முழுக்க முழுக்க விராட் கோலி ஆக்ஷன் கூடுதலாகவே இருந்தது. அந்த வகையில் சிஎஸ்கே அணி வீழ்த்திய போது ஆர்சிபி மற்றும் அதனுடைய ரசிகர்கள் அடாவடியாக கொண்டாடி வந்தார்கள்.

ஒரு கட்டத்தில் சிஎஸ்கே ரசிகர்களை சீண்டுவது, மைதானத்திற்கு வெளியே அத்துமீறிவது போன்ற சம்பவங்களும் நடந்தது. இது சிஎஸ்கே ரசிகர்களை கோபமடைய செய்தது. தற்போது ஆர்சிபி அணி தோல்வியை தழுவியதால் CSK ரசிகர்கள் பதிலடி கொடுக்கும் விதமாக இணையதளத்தில் மீம் திருவிழா வைத்து rcb ரசிகர்களை பொளந்து கட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் விராட் கோலியின் பாணியில், சிஎஸ்கே ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். அதாவது கடந்த சீசனில்  கம்பீரை வம்புக்கு இழுத்த பிறகு விராட் கோலி, “If you can’t take it, Better don’t give it”   என்று கூறியிருப்பார். அதை போல ஆர்சிபி அணி ரசிகர்கள் அமைதி காத்திருந்தால் இப்போது நாங்கள் கலாய்க்க தேவை வந்து இருக்காது என்று கூறி உள்ளனர்.