RR-க்கு எதிரான  ஐபிஎல் போட்டியில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RCB அணி தோல்வி அடைந்தது. இதனால் ப்ளே-ஆஃப் சுற்றில் இருந்து RCB அணி வெளியேறியது. லீக் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த RCB அணி, கடைசி 6 போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. மிகப்பெரிய ரசிகர்களை பட்டாளத்தை கொண்ட RCB அணி, ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து தினேஷ் கார்த்திக் ஓய்வாய் அறிவித்தது ரசிகர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் தினேஷ் கார்த்திக்கின் தைரியமும், நேர்மையும் எனக்கு மிகவும் பிடிக்கும் என விராட் கோலி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், 2022ஆம் ஆண்டு தான் சரியாக விளையாடாததால் தன்னம்பிக்கை இழந்து காணப்பட்டதாகவும், அப்போது தினேஷ் கார்த்திக் தன்னுடன் 2 முறை அமர்ந்து மிகவும் நேர்மையான விளக்கம் கொடுத்ததாகவும் கூறினார். மேலும், அவர் மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசுபவர் எனப் பாராட்டினார்.