பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உடல் நலக்குறைவின் காரணமாக நேற்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கும் ஷாருக்கான் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியை நேரில் பார்த்து அவருடைய அணி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்நிலையில் திடீரென நடிகர் ஷாருக்கானுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது அவருடைய ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் நலமுடன் இருப்பதாக அவருடைய மேனேஜர் கூறியுள்ளார். நடிகர் ஷாருகான் ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு ‌ போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு  அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் நடிகர் ஷாருகான் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி எனவும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் மேனேஜர் கூறியுள்ளார்.