தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால்‌. இவளுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் தொடர்ந்து படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தன் வாழ்க்கையில் நடந்த ஒரு கசப்பான அனுபவம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, நான் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தின் முதல் நாள் சூட்டிங் முடிவடைந்த பிறகு அந்தப் படத்தின்  உதவிய இயக்குனர் நான் இருந்த கேரவனுக்குள் அத்திமீறி நுழைந்தார்.

அவர் திடீரென தன்னுடைய சட்டையை கழற்றி தன் நெஞ்சில் குத்தி இருக்கும் என் பெயரின் டாட்டூவை காட்டினார். அவர் தன்னுடைய இதயத்தின் மீது என் பெயரோடு இருக்கும் டாட்டூவை காட்டும் போது அவர் என் மீது வைத்துள்ள அன்பு புரிந்தது. இருப்பினும் அவர் நடந்து கொண்ட விதமும் அதை வெளிப்படுத்திய விதமும் சரி கிடையாது. அவர் சட்டையை கழற்றியபோது எனக்குள் இருந்த படபடப்ப்பு அடங்குவதற்கு வெகுநேரமானது. மேலும் இதேபோன்று பொது இடங்களில் சில ரசிகர்கள் எல்லை மீறி காட்டும் அன்பு சங்கடத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.