நடிகை கௌதமி தன்னுடைய வாழ்க்கையில் இருந்த ரிலேஷன்ஷிப் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், உங்களுடைய ரிலேஷன்ஷிப்பில் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது .நீ எனக்காக வா என்று சொல்லி மொத்த வேலையும் நம்முடைய தலையில் கட்டி விடுவார்கள். இதை நான் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பாடமாக கற்றுள்ளேன்.

ஆகையால் எந்த ரிலேஷன்ஷிப்பாக இருந்தாலும் சரி அந்த மையப்புள்ளியை தாண்டவே கூடாது. இருவருக்கும் இடையேயான அன்பு அர்ப்பணிப்பு சமமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த உறவு நீண்ட நாட்கள் நீடிக்கும். 50 சதவீதத்தை நீங்கள் கடக்கும் பொழுது உங்களுக்கும் அதை செய்யும் வழக்கமாகிவிடும். எதிர் தரப்புக்கும் வாங்கி பழக்கமாகிவிடும் அது நல்லதல்ல என்று கூறியுள்ளார்.