பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கத்ரீனா கைஃப். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக விக்கி கவுசல் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் நடிகை கத்ரீனா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் பரவியது. ஆனால் இது குறித்து அவர்கள் தரப்பில் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தலில் நடிகை கத்ரீனா கைஃப் ஓட்டு போட வராதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நடிகை கத்ரீனா கைப்பின் தந்தை மற்றும் தாயார் பிரிட்டனை சேர்ந்தவர்கள் என்பதால் அவரும் பிரிட்டன் குடியுரிமை வைத்துள்ளார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் லண்டனில் ஒரு சாலையில் நடிகை கத்ரீனா மற்றும் அவருடைய கணவர் நடந்து செல்லும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதன் மூலம் நடிகை கத்ரீனா கர்ப்பமாக இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் பிரிட்டன் குடியுரிமையை பெறுவதற்காக இருவரும் அங்கு சென்று குழந்தையை பெற்றெடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)