பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அக்ஷய் குமார். இவர் நடிகை அசினுடன் சேர்ந்து கில்லாடி 786 மற்றும் ஹவுஸ்புல் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் ஹவுஸ்புல் 2 படத்தில் நடிக்கும் போது அசினுக்கு அக்ஷய் குமார் தன்னுடைய நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான ராகுல் ஷர்மாவை அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின் கடந்த 2016 ஆம் ஆண்டு அசின் மற்றும் ராகுல் ஷர்மா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஆரின் என்ற பெண் குழந்தை பிறந்தது‌.

இந்நிலையில் ராகுல் ஷர்மா நடிகர் அக்ஷய் குமார் குறித்து ஒரு சுவாரசிய தகவலை கூறியுள்ளார். அதாவது அக்ஷய் குமார் குழந்தை பிறந்த உடன் முதலில் எனக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் குழந்தை பிறப்பதற்கு முன்பாக மிகவும் பதட்டமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதன் பிறகு குழந்தையை பார்ப்பதற்காக அவர் தன்னுடைய தனி விமானத்தை தயாராக வைத்ததோடு தன் குடும்பத்தினர் வருவதற்கு முன்பாகவே குழந்தையை வந்து பார்த்ததாக கூறியுள்ளார். மேலும் நடிகை அசின் மகளுக்கு அக்ஷய் குமார் காட்ஃபாதராக இருப்பதாக கூறப்படுகிறது.