தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து லிப்ட், டாடா மற்றும் ஸ்டார் போன்ற திரைப்படங்களின்  மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகர் கவின். இவர் தற்போது நெல்சன் தயாரிப்பில் பிளடி பெக்கர் மற்றும் ஊர் குருவி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கவின் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இந்த படத்தை விஷ்ணு ஏதாவன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் விஷ்ணு ஏதாவன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும் இவர் இயக்கும் படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க இருக்கிறார் என்ற கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.