பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடிகை சமந்தா ஊ‌ சொல்றியா மாமா பாடலுக்கு குத்து நடனம் ஆடி இருந்தார்.

இந்நிலையில் புஷ்பா 2 படத்தில் அனிமல் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை டிரிப்டி டிம்ரி குத்துப்பாடலுக்கு ஆட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் பாடலின் படப்பிடிப்பு இனிமேல் தான் நடைபெறும் என்று கூறப்படும் நிலையில் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.