தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு மே 24 நாளை முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கத்திலிருந்து நாளை 535 பேருந்துகளும், நாளை மறுநாள் 595 பேருந்துகளும் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து பிற ஊர்களுக்கு நாளை, நாளை மறுநாள் 13 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயணம் செய்ய விரும்பும் பயணிகள் நேரில் அல்லது TNSTC செயலியில் முன்பதிவு செய்யலாம்.