பிரபல யூட்யூபர் இர்பான் சமீபத்தில் தன்னுடைய மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை இணையத்தில் வெளியிட்டிருந்தார். இது இந்திய சட்டப்படி குற்றம் என்பதால் அவர் மீது அடுத்தடுத்து புகார்கள் பாய்ந்தது. இந்த விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் உத்தரவு பிறப்பித்து 24 மணி நேரம் ஆகியும் இதுவரை அவர் வீடியோ எதுவும் வெளியிடவில்லை. இன்று சாலையோர கடையில் 100 ரூபாய்க்கு பிரியாணி ரிவிவ் கொடுக்கும் வீடியோவை அவர் தனது youtube இல் பதிவேற்றம் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.