தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்சி தொண்டர்களிடம் பேசும்  போது, அரசியல்வாதி பக்கத்திலேயே போகக்கூடாது என்று பெண்கள் நினைப்பாங்க. ஆனால்  இன்னைக்கு பெண்கள் பாரதிய ஜனதா கட்சியையும்,  பாரதிய ஜனதா கட்சி தலைவர்களையும் நம்பி இந்த கூட்டத்தில் அவங்க பெற்றெடுத்த குழந்தைகளை கொண்டு வந்து,  இந்த குழந்தையை நீங்க ஒரு அஞ்சு நிமிஷம் வாங்கிக்குங்க..  என் குழந்தைக்கு பெயர் வையுங்க….

என் குழந்தை கூட போட்டோ எடுத்துக்கோங்கன்னு சொல்லும்போது….  எங்களுடைய கடமை உணர்ச்சி, பொறுப்புணர்ச்சி இன்னும் அதிகமாகிறது. எப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் நம்ம கட்சி மீது. பெரிய கட்சி மீது நம்பிக்கை இல்லை, பெரிய கட்சியின் கூட்டத்தில் பெண் குழந்தைகளை நான் பார்ப்பது கிடையாது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் என் மண் என் மக்கள் யாத்திரையில் இத்தனை பெண் குழந்தைகளை கொண்டு வருகிறார்கள் என்றால் ?

இந்த கட்சியின் மீது உங்களுக்கு இருக்க கூடிய நம்பிக்கை அசைக்க முடியாத நம்பிக்கை. தவறு செய்ய மாட்டார்கள் என்று நினைக்கக்கூடிய உங்கள் மாண்பு.  அதற்கு நாங்கள் நன்றி கடன் பட்டிருக்கிறோம். எனவே நிச்சயமாக மாற்றம் நடக்கும். இதற்கு தேவை உங்களுடைய அளப்பரிய அன்பு. வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் 2024ல் எங்களைப் பொறுத்தவரை திருநெல்வேலியை வென்றெடுக்க வேண்டும் என்பது எங்களுடைய ஆசை, எங்களுடைய நோக்கம். குறிப்பாக மத்திய அரசினுடைய கவனம் நேரடியாக  இருக்க வேண்டும் என்பது நம்முடைய ஆசை. வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறோம்,  அடுத்த கட்டத்திற்கு இந்த பகுதி  செல்ல வேண்டும் என்று நினைக்கின்றோம் என தெரிவித்தார்.