செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை கொச்சைப்படுத்துகிறார் ஒரு ஆளுநர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, வடித்து தருகின்ற தீர்மானத்திற்கு கையெழுத்து போட வேண்டியதுதான் ஒரு ஆளுநரின் தலையெழுத்து. ஆனால் ஒரு போட்டி முதலமைச்சராக தன்னை கருதி கொள்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் ஒரு போட்டி அரசாங்கமே நடத்துகிறார். ஆகவே சாகடிக்கப்பட்ட சனாதனத்துக்கு,  மரித்துப்போன மனுதர்மத்திற்கும்…  உயிர் தருகின்ற வேலையை ஆளுநர் என்கிற அதிகாரத்தை பயன்படுத்தி செய்கிறார். அதைத் தாண்டி தமிழ்நாட்டை பழைய கற்காலம் நோக்கி இழுத்துச் செல்ல அவர் திட்டமிடுகிறார். இந்த ஆளுநர் நாட்டு மக்களின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகி இருக்கிறார். அவரை அம்பலப்படுத்துகிற கடமையை திமுக தொடர்ந்து செய்யும்.

ஒரு ஆளும் கட்சி அப்படின்னு சொன்னா….  எதிர்ப்பு மனநிலையால்…  அதிகாரத்தில் இருக்கிற கட்சிக்கு ஒரு பின்னடைவு இருக்கும். அதை நாங்க ஃபீல் பண்றோம். ஒரு சொற்பொழிவாளர் நானே பீல் பண்றேன். ஒரு கழக நிர்வாகிகள்… இதை எப்படி கரை சேருவது என்ற கவலை உங்களுக்கு இருக்கும் ? அந்த சோர்வு  இருக்க தான் செய்யும் என தெரிவித்தார்.