பிரபல  பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் 4 ஆம் தேதி அன்று, கேரளாவின் வரக்கராவைச் சேர்ந்த ஜார்ஜ் தாடில் என்பவர் ஒரு பேக்கரியில் 40 ரூபாய்க்கு 2 பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார். ஆனால் 300 கிராம் இருக்க வேண்டிய அந்த பிஸ்கட் பாக்கெட் 248 கிராம் மட்டுமே இருந்துள்ளது.

இதனால், அந்த நபர் திருச்சூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையி  நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு, ஜார்ஜ் தாட்டிலுக்கு ஆதரவாக பிஸ்கட் நிறுவனம் மீது ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.