இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் மோடி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நான் உயிருடன் இருக்கும் வரை எஸ்சி எஸ்டி இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது என்ற பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஹரியானாவில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா கூட்டணி அமைப்பதற்கு முன்பே யார் பிரதமர் என சண்டை போட்டு வருகிறார்கள். ஐந்து ஆண்டுகளில் 5 பிரதமர்களை வைத்து ஆட்சி நடத்த இந்தியா கூட்டணி ஆலோசித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்க வில்லை என்று மோடி குற்றம் சாட்டியுள்ளார்