திருப்பதியில் தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால் மே 24ஆம் தேதி இன்று இலவச தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 32 அறைகளிலும் பக்தர்கள் இலவச தரிசனம் செய்ய காத்திருப்பதால் அங்கும் இடமில்லாததால் பக்தர்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

கோடை விடுமுறையை முன்னிட்டு பல பகுதிகளில் இருந்தும் தொடர்ந்து பக்தர்களின் வருகை அதிகரித்து வரும் நிலையில் இந்த அலை மோதும் கூட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.