ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலக்கோடு அருகே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர் திசையில் வந்த கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த மூவரும் தூக்கி வீசப்பட்டனர்.

பச்சை என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மணி மற்றும் முனுசாமி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.