இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் வருகின்ற ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் போலி திராவிட மடல் அரசு நடப்பதாக மத்திய இணைய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

கோவில் பராமரிப்பின்மை மற்றும் மோசமான சாலைகள் தான் இந்த அரசின் சாதனைகள் என்று குற்றம் சாட்டியுள்ள அவர், கடந்த திமுக மற்றும் காங்கிரஸ் ஆட்சியின் சீரழிவை சரி செய்வதற்காக பாஜகவுக்கு 10 ஆண்டுகள் தேவைப்பட்டதாக கூறினார். மோடியின் 10 ஆண்டுகால ஆட்சி ட்ரெய்லர் என்றும் இனிமேல்தான் மெயின் பிக்சர் வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.