கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் பிரபுலட்சுமிகாந்த் லோகர். 23 வயதான இவர் ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்து அங்குள்ள நீதிமன்றத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இதற்கு இடையில் அந்த நீதிமன்றத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பியூன் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்ட போது இவரும் தன்னுடைய மதிப்பெண் சான்றிதழை கொடுத்து அதே நீதிமன்றத்தில் அவருக்கு வேலை கிடைத்துள்ளது. இந்த நிலையில் பிரபுலட்சுமிகாந்த் லோகர் படிப்பதற்கும் எழுதுவதற்கும் திணறியிருக்கிறார்.

இது நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரை அழைத்து நீதிபதி முன்பு வாசிக்க வைத்த போது அவர் திணறி உள்ளார் .இதனை அடுத்து அவருடைய கல்வி சான்றிதழை பார்த்தபோது ஏழாம் வகுப்பிலிருந்து அவர் நேரடியாக பத்தாம் வகுப்பிற்கு தேர்வு எழுதியதும் அதில் 99.5 சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

ஆனால் அவருக்கு கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி எந்த மொழியையும் படிக்க எழுத தெரியவில்லை. இதனால் அவருடைய கல்வி சான்றிதழ் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவருடைய கையெழுத்தையும் பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாளில் உள்ள கையெழுத்தையும் ஒப்பிட்டு பார்க்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.