அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டம் மிசாமாரி நகரில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில், கனக் சந்திர பொர்டொலொய் என்பவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

கடந்த ஜனவரி 23-ம் தேதி அன்று, இந்தப் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் ஒரு மாணவிக்குத் தலைமை ஆசிரியர் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஆசிரியர் கனக் சந்திர பொர்டொலொய்யை அதிரடியாகக் கைது செய்தனர்.