தமிழ் திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் அடுத்ததாக ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கார் மற்றும் பைக் ரேஸ் அதிக ஆர்வம் கொண்ட இவர் தற்போது சர்வதேச அளவில் பைக் பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் #AKMOTORIDE என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்பு களில் மட்டும் இன்றி அழகான சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ரைடர்ஸ், சாகசார்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு ஏகே மோடோ ரைடு சுற்றுப்பயணங்களை வழங்கும். இது குறித்து அறிவிப்பை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.