இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக திகழ்பவர் உலகநாயகன் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் 6 வயது இருக்கும்போது குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன் தன் முதல் படத்திலேயே ஜனாதிபதி விருதினை வென்றார். அதன் பிறகு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த கமல்ஹாசன் பல விருதுகளை வென்றுள்ளார்.

இந்நிலையில் அபுதாபியில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கிறது. இந்த விருது வழங்கும் விழா மே 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. மேலும் வாழ்நாள் சாதனையாளர் விருதினை பெற இருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு தற்போது பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.