பிரபல நடிகை அதா ஷர்மா நடிப்பில் கடந்த 5-ம் தேதி உலகம் முழுவதும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு உச்சநீதிமன்றம் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதிக்க கூடாது என தீர்ப்பு வழங்கியது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி முதல் பாஜகவினர் ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ரவி தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்த்துள்ளார். மேலும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தி கேரளா ஸ்டோரி படம் ஒரு மெல்லிய கொடூரமான எதார்த்தத்தை அம்பலப்படுத்தி உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.