கடந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் RRR. இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர் “ரே ஸ்டீவன்சன்” உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 58 வயதாகும் இவர் இத்தாலியில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். இவர் ஆங்கிலத்தில் படங்கள் மட்டுமின்றி டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். இவரின் மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் RRR திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வாங்கிய கொண்டாட்டம் அடங்குவதற்குள் இவர் உயிரிழந்துள்ளது படக்குழுவினரை கலங்க வைத்துள்ளது.