அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் கடைசி கட்டமாக அவர் கென்யா சென்றுள்ளார்.

அங்கு நைரோபியில் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின்போது அவர் கூறியதாவது “அடுத்து வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் போட்டியிட தயாராக இருக்கின்றார்” என்று கூறியுள்ளார். இதற்கு முன் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அமெரிக்க அதிபர்ஜோ பைடன் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.