செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் M.P, அண்ணாமலை  பாவம். அவர் தோழமைக் கட்சியை விமர்சித்து  சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு கட்சியினுடைய தலைவர்…  முதலில் அவருக்கு கூட்டணியில் இருக்கிற ஒரு கட்சியை….  துணைக்கு இருக்கின்ற கட்சியையே வச்சிக்க முடியல,  அவரால….

அந்தக் கட்சி நிறுவன தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களை திட்டி…  அவங்களே கோவிச்சுட்டு போற அளவுக்கு  பண்ண ஒரு மாமேதை அவரு. யாராவது  தேர்தல் நாலு மாசதுல இருக்கும்போது தோழமைக் கட்சியை விரட்டி விடுவாங்களா ? எத்தனை பேர் பிஜேபியில் மனம்நொந்து இருப்பாங்க.

மூத்த தலைவர்கள்,  முக்கியஸ்தர்கள் எல்லாம் என்ன இந்த மாதிரி அரசியல் பண்றார் ? என்று தனியாக பார்த்தாள் புலம்புறாங்க ஒவ்வொருத்தரும். இந்த மாதிரி ஒரு ஆள் கிட்ட மாட்டிகிட்டு,  தவிக்கிறோம் அப்படின்னு…  இருந்த கட்சியையே வெரட்டி விட்டுட்டு…  என்ன கதியாவதுன்னு, பயந்துட்டு,  யோசிச்சு கிடக்குறாங்க எல்லாரும்…  மூத்த தலைவர்கள் எல்லாம் அவரை திட்டிட்டு கிடக்குறாங்க என தெரிவித்தார்.