திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நம்முடைய முதல்வர்  தொலைநோக்கு பார்வையோடு செயல்பட்டு வருகிறார்கள். அதற்கான உதாரணம்தான் 17 லட்சம் மாணவர்கள் பயனடைகின்ற முதலமைச்சருடைய காலை சிற்றுண்டி திட்டம். இப்ப இந்த திட்டம் 17 லட்சம் மாணவர்கள்…  31,000 அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்கள் காலையில பள்ளிக்கூடத்திற்கு வரும்போது அவங்களுக்கு உணவு வழங்கப்படுகின்றது.

இப்போ இந்த திட்டத்தை  நம்முடைய பக்கத்து மாநிலம் தெலுங்கானாவிலும் அந்த மாநில அரசு   அறிமுகப்படுத்தி பின்பற்றி வருகிறது. அதே போல புதிய புதுமைப்பெண் திட்டம்,  நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம். இப்படி எண்ணற்ற திட்டங்கள். கல்வி மட்டுமே சமத்துவ வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஆயுதம் என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். நம்முடைய தமிழக முதல்வர் அவர்கள் எந்த நிகழ்ச்சியில் பேசினாலும்…

பள்ளி மாணவர்களிடம் பேசும்போது….. ஒரு தந்தை ஸ்தானத்திலிருந்து உங்களுக்காக நான் உழைக்கின்றேன்… மாணவர்களாகிய நீங்கள் படிப்பு, படிப்பு, படிப்பு என்று மட்டுமே சிந்திக்க வேண்டும். உங்களிடமிருந்து எடுக்க முடியாத ஒரு சொத்து என்னவென்றால் ? அது கல்வி மட்டும் தான் என்று நம்முடைய முதலமைச்சர் அடிக்கடி கூறுவார்கள்.

கல்விக்காக… மாணவர்களுக்காக… நீங்கள் படிக்க வேண்டும் என்பதற்காக…  250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு நூலகம். சுகாதாரத்துக்காக கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு  மருத்துவமனை என  முதலமைச்சர்கள் ஒவ்வொன்றையும் கலைஞர் நூற்றாண்டில் பார்த்து பார்த்து செஞ்சிட்டு இருக்காரு என தெரிவித்தார்.