உலகப் புகழ்பெற்ற இத்தாலிய ஓவியர் லியனார்டோ டா வின்சியின் 16ம் நூற்றாண்டு படைப்பான மோனா லிசா, இன்று வரை உலகம் முழுவதும் கணக்கற்ற நகல்களாக பரவி இருக்கிறது. ஆனால் தற்போது அந்த நகல் ஓவியங்கள் வெறும் பேப்பர், பேனர்களில் இல்லாமல் முட்டையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by @artisticeasel

ஆம், இன்ஸ்டாகிராமில் உள்ள ஒரு உணவுப் படைப்பாளரும் கலைஞருமான @artisticeasel, முட்டையின் மஞ்சள் கருவை பயன்படுத்தி ஆம்லெட் போடும் கல்லில் மோனா லசாவின் ஓவியத்தை வரைகிறார்.  அதன் பின்பு முட்டையின் வெள்ளை கருவை அந்த மஞ்சள் கருவின் மீது ஊற்றினார். இதை அடுத்து முட்டை முழுமையாக சமைக்கப்பட்டதும் அதை எடுத்து திருப்பி போட்ட போது மோனலிசாவின் புகைப்படம் வந்தது. உணவின் மேல் இப்படியான கலைப்பணி நடப்பது என்பது பலருக்கும் நம்ப முடியாத அதிசயமாகவே இருந்து வருகிறது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, பலரும் ஆச்சரியத்துடன் பாராட்ட, சிலர் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். “சோம்பேறிகளும் ஆம்லெட் சமைக்க முன்வந்து விடுவாங்க போல!” என நகைச்சுவை கலந்த கருத்துக்களும் வெளியாகியுள்ளன.