ஆக்ராவில் யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தைப் பார்க்கச் சென்ற 14 வயது சிறுமி ஸ்ருஷ்டி, செல்ஃபி எடுக்க முயன்றபோது பாலத்தில் இருந்து தவறி விழுந்து ஆற்றில் மூழ்கினார். உள்ளூர் மக்களும் காவல்துறையும் சிறுமியைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
குர்ஜா சிவலால் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ருஷ்டி, தனது தந்தை உதய் சிங்குடன் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில், இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள யமுனை ஆற்றில் வெள்ளத்தைப் பார்க்கச் சென்றார். பாலத்தின் ஓரத்தில் நின்று செல்ஃபி எடுக்க முயன்றபோது, அவர் கால் தவறி ஆற்றில் விழுந்தார். ஆற்றின் வேகமான ஓட்டம் காரணமாக சிறுமி உடனடியாக மூழ்கினார்.
இதைப்பார்த்து தந்தை சத்தம் போட அருகில் இருந்த கிராமவாசிகள் வந்தனர், ஆனால் ஆற்றில் இறங்கும் தைரியம் அவர்களுக்கு இல்லாததால் காவல்துறை உள்ளூர் நீச்சல் வீரர்கள் உதவியுடன் சிறுமியை தேடும் பணியைத் தொடர்கிறது, ஆனால் ஸ்ருஷ்டியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
