மத்திய பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. சத்தர்சால் ஸ்கொயர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடந்த இந்த சம்பவத்தில், ரிக்ஷா டிரைவருக்கும், ஒரு பயணியுமான கேஷு சௌராசியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அதே இடத்தில் டிரைவர், பயணியை கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் வீடியோவில் பதிவாகியுள்ளது.
#WATCH | Rickshaw Driver Hits Passenger In Front Of Police In #MadhyaPradesh‘s Chhatarpur; Video Goes Viral #MPNews pic.twitter.com/6WxyU58xDx
— Free Press Madhya Pradesh (@FreePressMP) September 14, 2025
தகவலின்படி, இந்தச் சம்பவம் கட்டணத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட தகராறாக கூறப்படுகிறது. இந்த சண்டையின் பது போலீசார் அருகிலேயே இருந்த போதிலும், ரிக்ஷா டிரைவர் கேஷுவை நேரில் கன்னத்தில் அறைவது போன்ற காட்சிகள் வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
பொதுமக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இதற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. போலீசாரின் முன்னிலையில் பொதுமக்கள் மீதான இந்த வன்முறை நடவடிக்கைக்கு என்ன காரணம், அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை என்ன என்ற கேள்விகள் எழுந்துள்ளன. போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
