தமிழக வெற்றி கழகத்தின் அரசு அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள விவகாரத்தில், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ள செய்தி வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் கே. அண்ணாமலை, தவெக அரசின் அமைச்சர்கள் லஞ்சக் கமிஷன் பேசத் தொடங்கியிருப்பதாகவும், அதற்குரிய ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். அண்ணாமலையின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து உடனடியாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும், தவறு செய்தவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

“>

 

இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, தவெக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவலும் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.