பெங்காலி சினிமாவின் சூப்பர் ஸ்டார் தேவ். இவர் தமிழ் நடிகர் விஜயை தற்போது புகழ்ந்து பேசியுள்ளார். அதாவது நடிகர் தேவ் ட்விட்டரில் ரசிகர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தமிழ் ரசிகர் ஒருவர் எங்களுடைய தளபதி விஜயை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். உங்களுக்கு சென்னையை பிடிக்குமா என கேள்வி எழுப்பினார். அதற்கு நடிகர் தேவ் விஜய் மிகப்பெரிய ஸ்டார் என்று கூறினார்.

அதோடு விஜய் மிகவும் நல்ல மனிதர் என்றும் தேவ் கூறினார். பெங்காலி சூப்பர் ஸ்டார் தேவ் தற்போது தமிழ் நடிகரான விஜயை புகழ்ந்து பேசியது தளபதி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக நடிகர் தேவ் தன்னுடைய இன்ஸ்பிரேஷன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான் என்று கூறியுள்ளார்.‌மேலும் நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.