தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வருபவர் தல அஜித். இவர் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ஏகே 62 திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார். நடிகர் அஜித் பைக் ரைடு மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் நடிகர் அஜித் சேலத்தில் உயர் ரக பைக்கில் பயணம் சென்றுள்ளார்.

அப்போது ரசிகர்கள் நடிகர் அஜித்தை வழிமறித்து அவரிடம் பேச அவரும் சகஜமாக அவர்களுடன் பேசியுள்ளார். மேலும் நடிகர் அஜித் ரசிகர்களை பார்த்து கையசைத்தவாறு சேலத்தில் பைக் ஓட்டி சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.