பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த ஜனவரி  மாதம் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் பதான் திரைப்படம் வசூல் சாதனை புரிந்து வருகிறது.

இந்நிலையில் பதான் திரைப்படம்‌ ரூ. 1009 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்திருந்ததாக படக்குழு அண்மையில் அறிவித்தது. ஹிந்தியில் பாகுபலி 2 வசூல் சாதனையையும் பதான்  திரைப்படம் முந்தியுள்ளது. தற்போது பதான் திரைப்படத்தின் புதிய வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி பதான் திரைப்படம் உலகம் முழுவதும் தற்போது வரை 1060 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளது. மேலும் இது தற்போது பதான் பட குழுவினர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.