தெலுங்கானாவில் புலம் பெயர்ந்த தொழிலாளியான ஸ்ரீராமுலா ஸ்ரீதர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சவூதி அரேபியாவில் இருந்து வீடு திரும்பும் போது விமான நிலையத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர் கடந்த சில நாட்களாக சவுதி அரேபியாவின் தம்மத்தில் வேலை பார்த்து வந்தார் என்று கூறப்படுகிறது. இவர் விமான நிலையத்தில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மயங்கினார். இதனால் அவசரமாக விமான மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
ఇంటికి తిరిగి వస్తూ విమానంలోనే ప్రాణం వదిలిన గల్ఫ్ కార్మికుడు
జగిత్యాల జిల్లా కోరుట్ల పట్టణానికి చెందిన శ్రీరాముల శ్రీధర్ గత కొన్ని సంవత్సరాలుగా గల్ఫ్లో జీవనం కొనసాగిస్తూ.. నిన్న సౌదీ నుండి హైదరాబాద్కు వస్తుండగా మార్గమధ్యంలో విమానంలోనే శ్వాస ఆడటం లేదని తెలియజేయగా విమానాన్ని… pic.twitter.com/AKuKpW2ZH8
— Telugu Scribe (@TeluguScribe) August 7, 2025
அங்கு மருத்துவர் அதிகாரிகள் அவரை பரிசோதனை செய்தனர். அதில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். டார்மாக்கில் ஸ்ரீதருக்கு மருத்துவர் ஒருவர் சிபிஆர் செய்வதை காட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் மனைவி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
