மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள கட்லி கிராமத்திற்கு அருகே இன்று அதிகாலை நடைபெற்ற கொடூர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இன்று அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் கட்சி ரோலி-ஆர்மோரி நெடுஞ்சாலையில் 6 இளைஞர்கள் வாக்கிங் சென்றுள்ளனர்.
அப்போது அப்பகுதி வழியாக கட்டுப்பாடு இன்றி வந்த வாகனம் ஒன்று வேகமாக இளைஞர்கள் மீது மோதியது. அந்த விபத்தில் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சையின் போது உயிரிழந்தனர் மீதமுள்ள இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அவர்கள் மேல் சிகிச்சைக்காக நாக்பூருக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ளவர்கள் நெடுஞ்சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் செய்ததாக கூறப்படுகிறது.
அந்த நெடுஞ்சாலையில் ஏராளமான மக்கள் குவிந்ததால் அப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்துக்கான காரணங்களை விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
மேலும் விபத்தில் உயிரிழந்த இளைஞர்கள் கட்லி கிராமத்தைச் சேர்ந்த நாம் தேவ் போயர் (14), தன்மய் பாலாஜி மான்கர் (15), மற்றும் திஷா துரியோதன் மேஸ் ராம், துஷார் ராஜேந்திர மார்பதே ஆகியோர் என தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்துக்கு குறித்து மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பாட்னாவிஸ் தனது ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த இளைஞர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 4 லட்சம் நிதி உதவி வழங்குவதாகவும் அறிவித்தார்.
மேலும் காயமடைந்த இளைஞர்களின் முழு மருத்துவச் செலவுகளையும் மாநில அரசு ஏற்கும் எனவும், அடையாளம் தெரியாத அந்த வாகனத்தின் ஓட்டுனர் குறித்த விவரங்கள் தற்போது தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
