உத்திரபிரதேச மாநிலம் பஹ்ரைச் நகரில் உள்ள கிராமத்தில் புஷ்பா தேவி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு குழந்தை கதவைத் திறந்து வெளியே சென்றுயுள்ளார். அப்போது அந்த வழியாக ஓநாய் அவரது வீட்டிற்குள் புகுந்து, அந்த பெண்ணை தாக்கியது. இவரது அலறல் சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் வந்தனர்

இதனால் ஓநாய் அங்கிருந்து தப்பி அருகில் உள்ள கரும்பு தோட்டத்திற்குள் ஓடியது. அதன் பிறகு காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே 5 ஓநாய்கள் பிடிபட்ட நிலையில், 6-வது ஓநாயை வனத்துறையினர் தேடி வருகின்றனர். இதற்கு “ஆபரேஷன் பெடியா” என்பது தொடங்கப்பட்டது.

அதோடு மீட்புக் குழுக்கள் ட்ரோன்கள், கேமரா பொறிகள் மற்றும் பாவ் மார்க் டிராக்கிங் ஆகியவற்றை பயன்படுத்தி விலங்குகளை தேடி வருகின்றனர். அதோடு கிராம மக்கள் இரவில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், சோலார் விளக்குகளை நிறுவுதல் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஓநாய்களை விரட்ட வெடிகள் போன்ற நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இதற்கு அரசாங்கம் “வனவிலங்கு பேரழிவு” என்பதை அறிவித்தது. இதைத்தொடர்ந்து முதல்வர் யோகி ஆதித்யநாத் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அதோடு  உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நூற்றுக்கணக்கான வன ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.