பீகாரின் கங்காபூரில் உள்ள RBS ஹெல்த் கேர் என்ற தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை நிர்வாக இயக்குனரான டாக்டர் சஞ்சய் குமார் மற்றும் அவரது சகாக்கள் இருவர், ஒரு நர்ஸை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.

இந்த கொடூரச் சம்பவம், கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம், மருத்துவமனைகள் எனும் பாதுகாப்பான இடங்களில் கூட பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செவிலியர் மருத்துவரின் அந்தரங்க உறுப்பில் பிளேடால் வெட்டி விட்டு அதிர்ஷ்டவசமாக, தனது உயிரை காப்பாற்றிக்கொண்டு ஒரு புதரில் மறைந்து கொண்டார் பின்னர் போலீஸிடம் போன் செய்து தகவலை கூறியதும் போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.