பொதுவாகச் சிங்கம் என்றாலே கம்பீரம், வேட்டை மற்றும் வீரம் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், சிங்கம் செய்த காரியம் “இது நிஜமாவே சிங்கம் தானா?” என்று கேட்க வைத்துள்ளது.
இந்த வீடியோவில், ஒரு சிங்கம் தாகத்துடன் காட்டில் தேங்கியிருக்கும் தண்ணீரைப் பருக வருகிறது. ஆனால், அதே தண்ணீருக்குள் ஒரு நபர் தலை முதல் கால் வரை சேற்றைப் பூசிக்கொண்டு, பாதி உடல் தண்ணீருக்குள் மூழ்கியபடி பதுங்கியிருக்கிறார்.
View this post on Instagram
சிங்கம் தண்ணீரை நெருங்கிய அந்த நொடி, அந்த நபர் சட்டென்று எழுந்து நிற்க, அதைக் கண்ட சிங்கம் ஒரு நிமிடம் நிலைகுலைந்து போனது.
சற்றும் எதிர்பார்க்காத இந்த ‘பேய்த் தோற்றத்தைப்’ பார்த்த காட்டு ராஜா, பயத்தில் ஒரு ஆட்டைப் போலத் தலைதெறிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
“சிங்கத்துக்கே பயம் வரும்னு இப்பதான் தெரியுது” என நெட்டிசன்கள் ஒருபுறம் கிண்டலடிக்க, “எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்கும்னு தெரியலையே” எனச் சிங்கமே நினைத்திருக்கும் எனப் பலரும் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
