இன்றைய காலகட்டத்தில் திருமண வீடுகளிலும் விசேஷங்களிலும் டன் கணக்கில் உணவு வீணாக்கப்படுவதைப் பார்க்கிறோம். ஆனால், ஒரு நபர் அந்த வீணாகும் உணவை வைத்துச் செய்த காரியம், ஒட்டுமொத்த இணையதளவாசிகளின் இதயங்களையும் வென்றுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு நபர் திருமண விருந்து முடிந்த பிறகு, மக்கள் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலைகளில் மிஞ்சியிருக்கும் உணவுகளை மிகவும் அக்கறையுடன் சேகரிக்கிறார்.
View this post on Instagram
“எச்சில் தட்டில் கை வைக்கிறாரே” எனப் பார்ப்பவர்கள் முகம் சுளிக்கும் முன்னே, அந்த உணவை அள்ளிச் சென்று தெருவில் பசியால் வாடும் நாய்களுக்கும் இதர விலங்குகளுக்கும் அவர் உணவாக வழங்குகிறார்.
ஒரு பருக்கை சோறு கூட வீணாகக் கூடாது என்ற எண்ணமும், வாயில்லா ஜீவன்களின் மீதான அவரது கருணையும் பார்ப்பவர்களைக் கண்கலங்க வைத்துள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “உண்மையான மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை” என அந்த நபரைப் பாராட்டி சல்யூட் அடித்து வருகின்றனர்.
