சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஆள் கொணர்வு வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணைக்காக நீலாங்கரையைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கோர்ட்டில் ஆஜாராகி இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையின் போது சிறுமியை அரசு காப்பகத்திற்கு அழைத்துச் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் மன உளைச்சலில் சிறுமி நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்ட வழக்கறிஞர்கள், காவல் துறையினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமிக்கு தீவிரசிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.