பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மனோஜ் பாஜ்பாய். இவர் தமிழில் சமர் மற்றும் அஞ்சான் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் மனோஜ் பாஜ்பாய் தன்னுடைய உணவு பழக்கவழக்கங்கள் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர் நான் இரவு உணவு சாப்பிட்டு 14 வருடங்கள் ஆகிவிட்டது என்று கூறியுள்ளார். அதாவது அவருடைய தாத்தா நல்ல உடல் வலுவோடு இருந்துள்ளார்.

அவர் அப்படி ஆரோக்கியமாக இருந்ததற்கு காரணம் நல்ல உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் இரவு உணவு சாப்பிடாமல் இருந்தது தான். இதைப் பின்பற்றி தான் நடிகர் மனோஜ் பாஜ்பாயும் இரவு உணவு சாப்பிடாமல் இருக்கிறார். இரவு பசி எடுத்தால் அதிக தண்ணீர் குடிப்பேன். இல்லையெனில் பிஸ்கட் சாப்பிடுவேன். முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஆனால் அதன் பின் நல்ல பலன் கிடைத்தது என்று கூறியுள்ளார்.