தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் கங்குவா படம் 10 மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்நிலையில் தற்போது கொடைக்கானலில் கங்குவா படத்தின் சூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நடிகர் சூர்யா உடல் எடை கூடி குண்டாக இருக்கிறார். மேலும் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.