தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக 5 நடிகைகளின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதன்படி நடிகைகள் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கத்ரீனா கைஃப், கரீனா கபூர், கங்கனா ரணாவத் ஆகிய நடிகைகளின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் நடிகை ஐஸ்வர்யாராய் அல்லது த்ரிஷா தான் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகை ஐஸ்வர்யா ராய் ஏற்கனவே நடிகர் அஜித்துடன் சேர்ந்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.