தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் வெற்றியை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில் இரண்டாம் பாகம் கடந்த 28-ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

பொன்னியின் செல்வன் 2 படம் 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்துள்ள நிலையில் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனதாக படக்குழு அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் மேக்கிங் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.