தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவை தாண்டி தற்போது கோலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல் சமீபத்தில் விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். இவரின் நடிப்பில் அடுத்தடுத்து பல திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் லியோ திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் விஜய் சேதுபதி இருப்பது போல் அவர் விக்ரம் படத்தில் பயன்படுத்திய கண்ணாடியை இயக்குனர் ரத்னகுமார் தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். இதனால் இது குறித்து விஜய் சேதுபதி இடம் கேட்டபோது, நான் லியோ படத்தில் நடிக்கவில்லை, ஆனால் ரத்தினகுமார் ஏன் அந்த புகைப்படத்தை பதிவிட்டார் என்பது தெரியவில்லை என கூறியுள்ளார்.