ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ராபர்ட் டி நிரோ (79). இவர் தற்போது 7வது குழந்தைக்கு தந்தையாகி உள்ளார். நடிகர் ராபர்ட் டி நிரோ ரேஜிங் புல், காட்ஃபாதர் 2 என ஏராளமான படங்களில் நடித்து புகழ்பெற்றவர். மேலும் பல படங்களிலும் நடித்துள்ளார். இவர் படங்களில் திறமையாக நடித்ததற்காக 2 முறை சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதும் வென்றுள்ளார்.

இந்நிலையில், தற்போது நடிகர் ராபர்ட்க்கு 7வது குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு ஏற்கனவே ட்ரேனா (51), ரஃபேல் (46), இரட்டையர்கள் ஜூலியன் – ஆரோன் (27), எலியட் (27), ஹெலன் (11) என 6 பிள்ளைகள் உள்ள நிலையில் தற்போது 79 வயதில் 7 ஆவது குழந்தை பிறந்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.