சீனாவின் ஹூனான் மாகாணத்தில் 16 வயதுடைய இளம் சிறுமி ஒருவர், தனது பிறந்த நாளில் அணிய வேண்டிய புதிய உடைக்கு உடல் சரியாக பொருந்த வேண்டும் என்பதற்காக, கடந்த இரண்டு வாரங்களாக வெறும் காய்கறிகள் மட்டுமே உணவாக எடுத்துக்கொண்டுள்ளார். இதில் முடிகாமல், வயிற்றுப் போக்கைத் தூண்டும் மாத்திரைகளையும் தவறாக உட்கொண்டுள்ளார். இந்த திடீர் மற்றும் அபாயகரமான டையட் முறையால் அவரது உடல் தீவிரமாக பாதிக்கப்பட்டது.
ஒருநாள் திடீரென, கால்களில் வலு இல்லாமல் கீழே விழுந்த இந்த சிறுமிக்கு மூச்சுத் திணறலும் ஏற்பட்டுள்ளது. அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவரது ரத்தத்தில் பொட்டாசியம் அளவு மிகவும் குறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குறைபாட்டால், அவரது தசைகள் மற்றும் நரம்புகளின் இயங்கும் செயல்பாடு முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனால் சுவாச செயலிழப்பும், இதயம் நின்று போவதற்கும் வழிவகுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவர்கள் நேரில் சிகிச்சை வழங்கி, அவசர சிகிச்சைப் பிரிவில் தனிப்பட்ட கவனிப்பில் வைத்து, உடனடி பொட்டாசியம் சத்துக்களை வழங்கியதால், அந்த சிறுமியின் உயிர் தற்போது பாதுகாக்கப்பட்டுள்ள நிலையில் இருக்கின்றது. இச்சம்பவம், வயதான இளம் பெண்கள் உடல் எடையை குறைக்க விரும்பும் தவறான முயற்சிகள் எவ்வளவு அபாயகரமானது என்பதை நினைவூட்டும் எச்சரிக்கை ஆகும். உடல் பராமரிப்பில் நிபுணர்களின் ஆலோசனை இல்லாமல் மேற்கொள்ளப்படும் டையட்டுகள், உயிருக்கு பேராபத்தை ஏற்படுத்தலாம்.
