அமெரிக்காவின் நியூயார்க் நகரம், குயின்ஸ் பகுதியில் கடந்த ஜூலை 24 ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை நடந்த கொடூர சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாகியது.
அடையாளம் தெரியாத ஒருவர், பிட் புல் நாயை ஒரு கயிற்றில் இழுத்துச் சென்று, அதற்கு மேல் எரியக்கூடிய திரவத்தை ஊற்றி தீ வைத்திருக்கிறார். அந்த நாயை அசைவற்ற நிலையில் இழுத்துச் சென்றதும், பின்னர் அதனைத் தீ வைத்து கொளுத்தியது போன்ற காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்பு பகுதியை கடந்து அந்த நபர் நாயை இழுத்துச் செல்வதும், அதை சாலையின் மூலையில் வைத்து , கொடூரமான முறையில் தீ வைப்பதும் காணப்பட்டுள்ளது. நாயின் உரிமையாளரும், குற்றவாளியும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
📷 FIND THIS MONSTER. MAKE HIM FAMOUS. 📷
📷 Dog Dragged & Burned Alive in Queens! 📷
Shocking. Sickening. Soulless.
📷 South Ozone Park, Queens
A man dragging a lifeless dog down 128th Street near 116th Avenue — then dousing the dog with accelerant and setting him on fire.
📷… pic.twitter.com/XJV7Y2bIn9— Paul Mueller (@RealPaulMueller) July 27, 2025
“>
இந்த சம்பவம் குறித்து விலங்கு வன்முறை பிரிவு மற்றும் ASPCA அமைப்பு இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. பிரேத பரிசோதனையும் நடத்தப்பட உள்ளது.
இந்த கொடூர சம்பவத்தை கண்ட இணையவாசிகள், “இவனும் சமுதாயத்துக்கே ஒரு ஆபத்து… இவனை பிடித்து நாய்க்கு நடந்தது போலவே தண்டிக்க வேண்டும்,” எனக் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். மேலும், அவனிடம் மனநிலை சரியில்லை என்று சந்தேகப்படும் நிலையில், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறார்கள். தற்போது, குற்றவாளியை அடையாளம் காண தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது.
