பீகாரின் தலைநகரான பாட்னா பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் நடந்த விபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சுங்கச்சாவடியில் காவலர் வினோத்குமார் என்பவர் பணியில் இருந்தார். அப்போது 7 வது பாதையில் வாகனம் ஒன்று பழுதடைந்த நிலையில் இருந்ததால் அதனை பக்கவாட்டில் எடுத்துச் செல்வதற்காக காவலர் வினோத் குமார் ஓட்டுனருக்கு உதவி செய்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் 8 வது பாதையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஸ்கார்பியோ கார் ஒன்று நுழைந்த நிலையில் நேரடியாக காவலரின் வலது காலில் மோதி நிற்காமல் சென்றது. இதில் காவலர் வினோத்குமார் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் கால் முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் ஸ்கார்பியோ வாகனத்தின் பதிவு எண் மற்றும் காரின் ஓட்டுநரை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.